பெண்கள் இப்படித்தானா?


    கதிரவன் கண்விழித்த அற்புதமான புறச்சூழலின் இனிமையை ஏப்பம் விட்டது அந்தக் கனமான காலை.
     கூரை முகட்டில் தொங்கிய அந்த இளம் சகோதரியின் உடலைக்கூட இறக்காமல் விட்டத்தையே அண்ணார்ந்து பார்த்து அதிசயித்துக் கொண்டிருந்த அயல் சமூகத்தை விலக்கிக்கொண்டு உள்ளே வந்த போலீசாருக்கு மாபெரும் அதிர்ச்சி.
சகோதரியின் பாதத்திற்கு கீழே தரையில் இருந்த கட்டிலில் பச்சைக் குழந்தை ஒன்று செத்துக்கிடந்தது.
     மேலும் சூழ்நிலையை வர்ணிக்கத்  தெரியாமல் வர்ணித்து சகோதர சகோதரிகளைக் குழப்பத்தில் ஆழ்த்தாமல் நேரடியாகவே விடயத்துக்கு வருகிறேன். அதற்கு முன் சில விடயங்கள்,இது இந்த சகோதரியின் உண்மை வரலாறு. தொடர்ந்து வரும் கதையில் இச் சகோதரியின் பெயரும் சில முக்கியமான விடயங்களும் மாற்றப்பட்டுள்ளது. எனவே இச் சகோதரியைப் பற்றிக் கிளறாமல் கதையின் சாரத்தை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
     சுபா தீவகத்தை பிறப்பிடமாக கொண்டவள் நாவற்குழியை சேர்ந்த நிமலன் என்பவனை காதலித்து மணந்துகொண்டாள். காதலிக்கும் போது இனித்த உறவு மண வாழ்க்கையில் 3மாதங்கள் மட்டும் தான் இனித்தது.
            மிகுதி விரைவில்...........

Comments