பெண்கள் மீதான பாலியல் தொல்லை

 
  2013ஆம் ஆண்டு ஜேர்மனிய பல்கலைக் கழகம் ஒன்றின் ஆராய்ச்சியின் பிரகாரம்,சராசரியாக இருபது இலட்சம் பெண்கள் பாலியல் சித்திரவதைகளை அனுபவித்து வருகிறார்கள் உலகம் முழுவதும். இதைப்படிக்கும் எம் சகோதரிகளில் ஒரு சிலரும் இத்தகைய அருவருப்பான விடயத்தை சந்தித்து இருக்கக் கூடும்.
       ஆய்வில் பாலியல் தொல்லை என்பதை "பெண்களை உடல் ரீதியாக துன்புறுத்தி அவர்களின் உடல்,மனரீதியான வேதனைகளை இரசிக்கும் வக்கிரம்" என வரைவிலக்கணப்படுத்தி உள்ளனர்
சரி இரண்டாவது முக்கியமான விடயம் பெண்கள் மீதான பாலியல் தொல்லையை மேற்கொள்பவர்கள்.
        ஆய்வின் படி 80% ஆண்களும் 11% பெண்களும் பெண்கள் மீது பாலியல் தொல்லையை மேற்கொள்கின்றனர்.
80% ஆண்களில் 75% மானவர்கள்; கல்வி, பணம், வர்க்கமேன்மை ஏதாவது ஒன்றில் உயரிய செல்வாக்கை கொண்டிருப்பவர்கள் என இனங்காணப் பட்டுள்ளது. 11%பெண்களில் 90%மான பெண்கள் மிகுந்த தாழ்த்தப்பட்ட சமூக அந்தஸ்து உடையவர்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பாலியல் வக்கிரத்தை மேற்கொள்ளும் ஆண்கள் குறித்து இன்னோர் கட்டுரையில் விரிவாக காண்போம்.  இப்போது 11%பெண்களில் குறித்த 90%பெண்கள் பற்றி பார்க்கலாம்.
     "பெண்களை உடல் ரீதியாக துன்புறுத்தி அவர்களின் உடல்,மனரீதியான வேதனைகளை இரசிக்கும் வக்கிரம்" பெண்களுக்கே வந்தது எப்படி? வேதனை தருகின்ற ஒரு விடயம் குறித்த பெண்கள் ஏற்கனவே பாலியல் தொல்லையை
அனுபவித்தவர்கள் என்பதுதான். சாதாரணமாக நம் பார்வையில் படுகின்ற ,இன்னொருவரின் கடையில் வேலை செய்கின்ற சகோதரி, personal class இற்கு செல்லும் தங்கை, பால்க்கார அக்கா, கீரைக் கடை அம்மா என நம்மில் ஒருவர் என்று நாம் உறவு பாராட்டும் அவர்கள் தான் அந்த 90% என்பது அடுத்த அதிர்ச்சி. செல்வாக்கு மிகுந்த கயவர்கள் அந்தப்பெண்களின்
1.ஏழ்மை
2.இயலாமை
3.மானத்துக்கு பயப்படும் தன்மை
4.அப்பாவித்தனம்
என்பவற்றை தமக்கு சாதகமாக பயன்படுத்தி அவர்கள் மீது பாலியல் வன்முறையை பிரயோகம் செய்கிறார்கள். பாதிக்கப்பட்ட சகோதரிகளில் ஒரு சிலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். மற்றைய சகோதரிகள்
1.பொறுப்பு மிகுந்த வாழ்க்கை
2.பாதிக்கப்பட்ட விடயம் வெளியில் தெரிந்தால் தனக்கு தான் அவமானம் என்ற தப்பான எண்ணம்
3.வெளியில் சொன்னால் வேலை போய்விடும் பின் தன் பொறுப்பை நிறைவேற்ற முடியாது என்ற ஆதங்கம்.
போன்றவற்றால் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் கிட்டத்தட்ட ஒரு மன நோயாளியின் அளவுக்கு மாறிவிடுகிறார்கள். பெண்கள் சமூகத்தில் இருந்து தாங்கள் மட்டும் புறந்தள்ளப்பட்டாதக எண்ணிக் கொண்டு பாதிக்கப்படாத ஏனைய சகோதரிகள் மீது பொறாமையை வளர்த்துக் கொண்டு அவர்களைத் தாங்கள் பழிவாங்குவதாக எண்ணி அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி திருப்தி அடைகிறார்கள்.
இவர்களை மாறுவதற்கான ஒரேஒரு வழி உளஆறுப்படுத்தல் மட்டுமே.

Comments